பிரபல நடிகர் சஹானா ஸ்ரீதர் காலமானார்...
NEWS Apr 06,2025 01:32 pm
பிரபல நடிகர் சஹானா ஸ்ரீதர் வயது (62) மாரடைப்பால் காலமானார். அழியாத கோலங்கள், ராஜவம்சம் உள்ளிட்ட படங்களிலும், தாமரை, சித்தி-2 உள்ளிட்ட டிவி தொடர்களிலும் நடித்துள்ளவர் சஹானா ஸ்ரீதர். சஹானா தொடரில் நடித்து பிரபலமானதால் சஹானா ஸ்ரீதர் என்று அழைக்கப்பட்டார். சென்னையில் வசித்த அவருக்கு இன்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து ஹாஸ்பிடலில் சேர்த்தபோது மாரடைப்பால் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.