வேளுக்குடியில் வெங்கடேச பெருமாளுக்கு வழிபாடு
NEWS May 07,2026 10:47 pm
திருவாரூல் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள வேளுக்குடியில் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் நேற்று சிறப்பு வார வழிபாடு நடைபெற்றது. பிரசன்ன வெங்கடேச பெருமாளுக்கு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.