திருக்கண்ணமங்கையில் கீரி கடித்து சிறுவன் இறப்பு
NEWS Jan 29,2026 04:16 pm
திருவாரூர் மாவட்டம் அம்மையப்பன் திருக்கண்ணமங்கையில் முத்து வீட்டிற்கு வந்த கீரிப்பிள்ளை, அவரது ஏழு வயது மகன் நவீன் கையை கடித்துள்ளது. அந்தப்பகுதி மருத்துவமனையில் சிறுவனுக்கு ஊசி போட்ட பெற்றோர் உதாசீனமாக சில மாதம் இருந்துள்ளனர். ரேபிஸ் நோயால் பாதித்த சிறுவனை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். சிகிச்சை பலனின்றி சிறுவன் இறந்துவிட்டான்.