திருவாரூர் மாவட்ட காவல்துறையின் அறிவிப்பு
NEWS Oct 31,2025 06:34 pm
திருவாரூர் மாவட்ட காவல்துறை பொதுமக்களின் கவனத்திற்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பாஸ்போர்ட், ஆர்.சி. புக், டிரைவிங் லைசென்ஸ், அடையாள அட்டை, பள்ளி மற்றும் கல்லூரி சான்றிதழ்கள் போன்ற ஆவணங்கள் தொலைந்து போனால் இனி காவல் நிலையத்தை நேரடியாக அணுக தேவையில்லை. பொதுமக்கள் eservices.tnpolice.gov.in என்ற இணையதளத்தில் சென்று புகார் பதிவு செய்து, அதற்கான acknowledgment (பதிவு நகல்) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த வசதியால் மக்கள் நேரம் மிச்சப்படுத்தி எளிதாக ஆன்லைனில் தங்கள் புகாரை பதிவு செய்ய முடியும் எனவும் தெரிவித்துள்ளது.