திருத்துறைப்பூண்டியில் தீபாவளி விழிப்புணர்வு
NEWS Oct 16,2025 03:14 pm
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் பழைய பேருந்து நிலையம் அருகே பொதுமக்கள் சார்பில் “விபத்தில்லா தீபாவளி” எனும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தீபாவளி பண்டிகையை பாதுகாப்பாகவும், சுற்றுச்சூழல் நட்பாகவும் கொண்டாட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. பட்டாசு வெடிப்பில் பாதுகாப்பு விதிகள் குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. மாணவர்கள் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.