தென்குவளவேலியில் மீண்டும் மஞ்சப்பை இயக்கம்
NEWS Oct 16,2025 03:13 pm
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தென்குவளவேலி அரசு உயர்நிலைப் பள்ளியில் மீண்டும் மஞ்சப்பை இயக்கம் தொடங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் வெற்றிவேலன் தலைமை வகித்தார். பசுமைப் படை ஒருங்கிணைப்பாளர் நடனம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆசியர்களுக்கும், மாணவர்களுக்கும் பள்ளியின் பெயர் அச்சடிக்கப்பட்ட மஞ்சள் பைகளை வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார்.