பளுதூக்கும் போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவன்
NEWS Oct 15,2025 03:40 pm
பாராட்டு சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டியில், ஆடவர் பளுதூக்குதல் 65 கிலோ எடை பிரிவில் மன்னார்குடி தேசிய மேல்நிலைப் பள்ளி மாணவர் பி.ஆர். காமேஷ் மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் மற்றும் ரூ. 75 ஆயிரம் ரொக்கப் பரிசை வென்றார். சிறப்பிடம் பெற்ற மாணவனை பள்ளி ஆசிரியர்கள் பாராட்டினர்.