கிராம உதவியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
NEWS Oct 15,2025 03:44 pm
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டாட்சியர் அலுவலக முன்பு தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர்கள் சங்கம் சார்பில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிராம உதவியாளர்களின் ஊதிய உயர்வு, நிரந்தர பணியிட நிலை, ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சங்க மாவட்ட செயலாளர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்