திருவாரூர் மாவட்ட விவசாயிகள், வேளாண்மை பொறியியல் துறையில் உள்ள அறுவடை இயந்திரங்களை “உழவர் செயலி” மூலம் இ-வாடகை தளத்தில் பதிவு செய்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார். இதன் மூலம் விவசாயிகள் குறைந்த செலவில் நவீன இயந்திரங்களை எளிதில் பெறலாம் என்றும், இதனால் உழைப்பும் நேரமும் மிச்சமாகும் எனவும் ஆட்சியர் குறிப்பிட்டுள்ளார்.