திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வழியாக அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டால் எந்த விதமான இடையூறும் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நீடாமங்கலம் வழியாக அரசு மற்றும் தனியார் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக வர்த்தக சங்கம் சார்பிலும் அரசு போக்குவரத்து கழகத்திற்கு கோரிக்கை மனுவானது ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது.