கோட்டூர்: பள்ளியில் கலைத் திருவிழா போட்டிகள்
NEWS Oct 14,2025 02:00 pm
திருவாரூர் மாவட்டம் கோட்டூரில் இன்று (அக்.14) 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான கலைத் திருவிழா போட்டிகள் வட்டாரக் கல்வி அலுவலர் விர்ஜின் ஜோனா தலைமையில் தொடங்கின. வட்டாரக் கல்வி அலுவலர் இராமசாமி போட்டிகளைத் தொடங்கி வைத்தார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் சுப்பிரமணியன், ஆசிரியர் பயிற்றுநர்கள் போட்டிகளை ஒருங்கிணைத்தனர். மாணவர்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.