வட்டாட்சியர் அலுவலகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்
NEWS Oct 14,2025 11:21 am
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நிலுவையில் உள்ள மூன்று சதவீத அகவிலைப்படியை தீபாவளிக்கு முன்பாக வழங்க வேண்டும் எனவும், அரசு ஊழியர்களின் நிலுவை கோரிக்கைகள் விரைவில் தீர்க்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினர். பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.