சாலை மறியல் போராட்டத்தில் விவசாயிகள்
NEWS Oct 13,2025 07:09 pm
திருவாரூர் மாவட்டத்தில் குருவை அறுவடை பணிகள் முடிந்த நிலையில் நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை விரைவாக எடுக்கவும், அதிக லாரிகளை நியமிக்கவும், நெல்லின் ஈரப்பதத்தை அதிகரிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டூரில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகள் விளைபொருட்களுக்கு உரிய விலையும் கொள்முதல் பணிகளும் நடைபெற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.