மன்னார்குடியில் காமராஜர் பேருந்து நிலையம் திறப்பு
NEWS Oct 12,2025 10:43 pm
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் புதிய வசதிகளுடன் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த பெருந்தலைவர் காமராஜர் பேருந்து நிலையத்தை மாநில நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கேஎன்நேரு திறந்து வைத்தார். இதில் திருவாரூர் எம்எல்ஏ பூண்டி கலைவாணன், மாவட்ட ஆட்சியர் மோகனசந்திரன் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர். புதிய பேருந்து நிலையம் மூலம் பயணிகளுக்கு சிறந்த போக்குவரத்து வசதி ஏற்படுகிறது.