திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் உள்ள புனித தெரசா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழ் மொழி இலக்கிய திறனறிவு தேர்வு தொடங்கியது. பள்ளி தலைமையாசிரியை தலைமையில் நடைபெற்ற இத்தேர்வை கல்வி துறை அதிகாரிகள் துவக்கி வைத்தனர். மாணவர்களின் மொழி அறிவும் இலக்கியப் புலமையும் மேம்படும் வகையில் இத்தேர்வு நடைபெறுகிறது. மாணவர்கள் உற்சாகமாக பங்கேற்றனர்.