இளவங்கார்குடியில் தொகுதி எம்எல்ஏவும் ஆட்சியரும்
NEWS Oct 12,2025 06:39 pm
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியத்தின் இளவங்கார்குடி ஊராட்சி சேவை மைய கட்டிடத்தில் மக்களவை தேர்தல் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் திருவாரூர் தொகுதி எம்எல்ஏ பூண்டி கலைவாணனும், மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரனும் கலந்து கொண்டு மக்களின் குறைகள் மற்றும் கோரிக்கைகளை கேட்டறிந்தனர். கூடுதல் ஆட்சியர் பல்லவி வர்மா, அரசு அதிகாரிகள் மற்றும் ஊரக மக்கள் பலரும் இதில் பங்கேற்று கருத்துகளை பகிர்ந்தனர்.