கொல்லாபுரம் ஆலயத்தில் சிறப்பு திருமஞ்சனம்
NEWS Oct 12,2025 06:40 pm
திருவாரூர் மாவட்டம் கொல்லாபுரத்தில் அமைந்துள்ள தொன்மை வாய்ந்த ஸ்ரீவரதராஜ பெருமாள் ஆலயத்தில் புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையையொட்டி சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு ஆலயத்தில் மங்கல இசை முழங்க வேத மந்திர ஓசையுடன் பெருமாளுக்கு புனித நீராட்டம் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசித்து, தீபம் ஏற்றி வழிபட்டனர். ஆலயத்தில் ஆன்மிகச் சோலை போல் பக்தி பரவசம் நிலவியது.