சிறுபான்மை நல அமைச்சர் திருவாரூரில் பேச்சு
NEWS Oct 12,2025 06:40 pm
திருவாரூர் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பூண்டி கலைவாணன் தலைமை தாங்கினார். சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஆவடி நாசர் பேசுகையில், “சிறுபான்மையினரை ஒன்றிய அரசு நசுக்க நினைக்கும் சூழல் நிலவுகிறது. ஆனால் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சிறுபான்மையினரை கண் இமைப்போல் பாதுகாத்து வருகிறார்” என தெரிவித்தார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மோகனசந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.