திருவாரூர் ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த உணவுத்துறை அமைச்சர்
NEWS Oct 11,2025 10:45 pm
திருவாரூர் ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, “மழை அதிகமாக பெய்து வரும் நிலையில் நெல் ஈரப்பதம் குறித்து உடனடியாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்படும்” என்று தெரிவித்துள்ளார். விவசாயிகள் நலனுக்காக தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா மற்றும் மாவட்ட ஆட்சியர் மோகனசந்திரனும் உடன் இருந்தனர்.