பூந்தாழங்குடியில் ரேஷன் கடை பேருந்து நிறுத்தம் திறப்பு
NEWS Oct 11,2025 11:50 am
திருவாரூர் மாவட்டம் பூந்தாழங்குடியில் மூலங்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்துடன் இணைந்த பூந்தாழங்குடி பகுதியில் புதிய ரேஷன் கடை மற்றும் புதிய பேருந்து நிறுத்தம் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் திருவாரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் தலைமையேற்று புதிய ரேஷன் கடையையும், பேருந்து நிறுத்தத்தையும் திறந்து வைத்தார்.