திருவாரூர் மாவட்டம் மன்னர்குடியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும் கடை வர்த்தகர்களின் வியாபாரம் பாதிக்கப்படாமல் இருக்கவும் சாலை ஓர கடைகளை ஒழுங்குபடுத்தி தர வேண்டும் என்று மன்னார்குடி வர்த்தக சங்கத்தின் சார்பில் நகரமன்ற தலைவர் மன்னை சோழராஜனிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கை பண்டிகை காலங்களில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி முன் வைக்கப்பட்டுள்ளது.