திருவாரூர் மாவட்டம் முழுவதும் சாலைகளில் சுற்றித் திரியும் மற்றும் வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக மன்னார்குடியில் இன்று நாய்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது. இதனை மன்னார்குடி நகர மன்ற தலைவர் மன்னை சோழராஜன் மற்றும் துணைத் தலைவர் கைலாசம் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.