திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் முக்குலத்து புலிகள் கட்சியின் நிறுவன தலைவர் ஆறு சரவணன் மன்னார்குடியில் செய்தியாளர்களை சந்தித்தார். சென்னையில் வழக்கறிஞரை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தாக்கிய சம்பவத்தை அவர் வன்மையாக கண்டித்தார். தாக்கியவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்றும் இதனை கண்டித்து டெல்டா மாவட்டங்களில் விரைவில் போராட்டம் நடத்தப்படும் என்றும் ஆறு சரவணன் தெரிவித்தார்.