திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண அரங்கில் அதிமுக சார்பில் வாக்குச்சாவடி முகவர்களுக்கான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு நகர செயலாளர் சண்முகசுந்தரம் தலைமை பொறுப்பை ஏற்றார். முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். கூட்டத்தில் பல்வேறு அதிமுக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.