நீடாமங்கலம் போலீசார்களுக்கு குவியும் பாராட்டுகள்
NEWS Oct 08,2025 03:15 pm
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே நடைபெற்ற சாலை விபத்தில் பைக் ஓட்டியவர் கடுமையாக காயமடைந்தார். அந்த பைக்கில் ரூ.2,36,000 ரொக்கம் இருந்தது. அப்போது சம்பவ இடத்துக்கு வந்த நீடாமங்கலம் போலீசார் அந்த பணத்தை கவனமாக சேகரித்து விசாரணை நடத்தி உரியவரை அடையாளம் கண்டு பாதுகாப்பாக அவரிடம் ஒப்படைத்தனர். போலீசாரின் நேர்மை மற்றும் பொறுப்புணர்வுக்கு பொதுமக்கள் சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.