திருவாரூரில் பணியாளர்களின் வேலை நிறுத்தம்
NEWS Oct 08,2025 01:53 pm
திருவாரூரில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம் முன்பு பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு போராட்டம் நடத்தினர். ஊதிய உயர்வு, பதவி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். பணியாளர்கள் கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பினர்.