திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள உதயமார்த்தாண்டபுரத்தில் நேற்று மாலை திடீரென பெய்த மழையால் வயல்களில் அறுவடை செய்து வைத்திருந்த சுமார் 2000 நெல் மூட்டைகள் நனைந்து சேதமடைந்தன. பெரும் உழைப்புடன் விளைச்சலை எடுத்து வந்த விவசாயிகள் கடும் மனவேதனையில் ஆழ்ந்துள்ளனர். திடீர் மழையால் நெல் முளைப்போக்கு ஏற்படும் ஆபத்து இருப்பதாகவும் மனக்குமுறலை வெளிப்படுத்தியுள்ளனர்.