போஷன் மா பேரணிக்கு ஆட்சியர் கொடியசைப்பு
NEWS Oct 07,2025 03:47 pm
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் “போஷன் மா” (Poshan Maah) விழிப்புணர்வு பேரணி இன்று சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் திரு. மோகனச்சந்திரன் அவர்கள் கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் குழந்தைகள், பெண்கள் மற்றும் மகளிர் நலத்துறை அலுவலர்கள் பெருமளவில் கலந்து கொண்டு, சத்துணவின் முக்கியத்துவம் மற்றும் ஊட்டச்சத்து குறைவால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த விழாவின் நோக்கம் — ஒவ்வொரு குடும்பத்திலும் சத்துணவின் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.