தமிழ்நாடு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் கூட்டம்
NEWS Oct 07,2025 12:17 am
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி லூர்து மஹாலில் தமிழ்நாடு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் கூட்ட கருத்தரங்கம் சிறப்பாக நடைபெற்றது. மாநிலம் முழுவதிலும் இருந்து பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்றோர் இதில் கலந்து கொண்டனர். இந்த கருத்தரங்கில் ஓய்வூதியர் நலன்கள், மருத்துவ காப்பீட்டு திட்டங்கள், ஓய்வூதிய உயர்வு உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. சங்க நிர்வாகிகள் உரையாற்றி, “ஓய்வூதியர்களின் நலன்களைப் பாதுகாக்கும் வகையில் அரசு உடனடியாக தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தினர்.