ஸ்ரீ கைலாசநாதர் ஆலயத்தில் பிரதோஷ வழிபாடு
NEWS Oct 06,2025 11:56 am
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஸ்ரீ பெரிய நாயகி சமேத ஸ்ரீ கைலாசநாதர் ஆலயத்தில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. அதனை ஒட்டி ஆலயத்தில் உள்ள நந்தி பெருமானுக்கு பால், சந்தனம் மற்றும் மஞ்சள் தூள், திரவியப்பொடி உள்ளிட்ட பல்வேறு பூஜை பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் தீபாராதனை நடைபெற்றது. பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.