அம்மையப்பனில் மணல் கடத்திய இருவர் கைது
NEWS Oct 04,2025 10:55 pm
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அடுத்த அம்மையப்பனில் மணல் கடத்திய இருவர் கைது செய்யப்பட்டனர். அனுமதியின்றி டிராக்டர் மூலம் மணல் எடுத்ததாகக் கூறப்படும் சம்பவத்தில், போலீஸார் ஏழு பேர் மீது வழக்குப்பதிவு செய்து, ராஜசேகர் மற்றும் சேசுராஜன் ஆகிய இருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.