சரஸ்வதி கோவிலில் வித்யாரம்பம் நிகழ்ச்சி
NEWS Oct 04,2025 08:31 pm
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே கூத்தனூரில் உள்ள பிரசித்தி பெற்ற சரஸ்வதி கோவிலில், ஆண்டுதோறும் நடைபெறும் சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி விழாவின் ஒரு பகுதியாக, இன்று வித்யாரம்பம் வழிபாடு நடைபெற்றது. இதில், குழந்தைகள் நெல்மணியில் 'அ' என எழுத வைத்து, தங்கள் கற்றலைத் தொடங்கினர். கல்வி, கலைகள், தொழிலுக்குப் பயன்படுத்தும் பொருட்களை வைத்து வழிபடும் வழக்கமும், விஜயதசமி நாளில் குழந்தைகளுக்கு முதன் முதலில் கல்வியைத் தொடங்கும் சடங்குகளும் இங்கு நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.