அக்.5, 6 தேதிகளில் வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்
NEWS Oct 04,2025 05:01 pm
திருவாரூர் மாவட்டத்தில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்று திறனாளிகளின் வீடுகளுக்கே வந்து பொது வினியோக திட்டப்பொருள்கள் வினியோகம் செய்யப்படுகின்றன. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 5, 6 தேதிகளில் வீடு தேடி குடிமை பொருட்கள் வினியோகம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாக சென்னை மண்டல கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் செய்தி வெளியிட்டுள்ளார்.