புதிய பேருந்து நிலையத்தை அமைச்சர் ஆய்வு
NEWS Oct 04,2025 11:51 am
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உருவாகி வரும் ஒருங்கிணைந்த அதிநவீன புதிய பேருந்து நிலையத்தின் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. தமிழக தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா நேற்று மாலை நேரில் சென்று பணிகளை ஆய்வு செய்தார். வரும் அக்டோபர் 12ஆம் தேதி இந்த பேருந்து நிலையம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. திறப்பு விழாவை முன்னிட்டு பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருப்பது குறிப்பிடத்தக்கது!