திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் செட்டித்தெரு ஸ்ரீ வேம்படி சீதளாதேவி மகா மாரியம்மன் ஆலயத்தில் நவராத்திரி திருவிழாவில் அம்மன் வெண்ணைத்தாழி அலங்காரத்தில் காட்சி அளித்தார். மற்றொரு பக்கம் அம்மன் ஸ்ரீ தனலெட்சுமி அலங்காரத்தில் காட்சி அளித்தார். சிறப்பு பூஜைகள் தீபாராதனை நடைபெற்றது. வழக்கம் போல் பொது மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.