முத்துப்பேட்டையிலிருந்து அணைக்காடு ரவுண்டனா வழியாக செல்லும் பைபாஸ் சாலை வழியாக தஞ்சாவூர் சென்றால் அதிக பட்சமாக ஒரு மணி நேரத்திற்குள் சென்று விடுகின்றனர். அதனால் முத்துப்பேட்டையிலிருந்து பட்டுக்கோட்டை செல்லாமல் அணைக்காடு பைபாஸ் வழியாக தஞ்சாவூர் செல்லும் வகையில் புதிய வழித்தடத்தில் பேருந்துகள் இயக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முத்துப்பேட்டை பகுதி மக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.