திருவாரூர் மாவட் ம் முத்துப்பேட்டை வடசங்கேந்தி ஊராட்சி கிராம மக்களுக்கு கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. வடசங்கேந்தி வடக்கு தெரு செல்லும் சாலையிலுள்ள கொள்ளிடம் குடிநீர் தொட்டிக்கு செல்லும் பம்பிங் ஏர் வால்வு சேதமாகி உள்ளது. சேதமான வால்வின் மூலம் நீர் வெளியேறி அப்பகுதியில் வீணாகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.