ஆட்டூர் மரைக்கா கோரையாற்றில் ஆகாய தாமரைகள்
NEWS Sep 30,2025 05:22 pm
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே ஆட்டூர் மரைக்கா கோரையாற்றில் ஆகாய தாமரைகளை அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆற்றில் ஆகாய தாமரை செடியினால் மழை காலங்களில் தேங்கிய மழை நீரை வடிய வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். பருவ மழை தொடங்கும் முன்பாக ஆகாய தாமரை செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.