நீடாமங்கலம்: சிறப்பு திருமஞ்சன சேவை
NEWS Sep 29,2025 10:43 pm
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் திருமண வரம் அருளும் ஸ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் இன்று சிறப்பு திருமஞ்சன சேவை நடைபெற்றது. அர்ச்சகர்கள் வேதமந்திர ஓதங்களுடன் பெருமாளுக்கும், தாயாருக்கும் பால், பன்னீர், தேன் உள்ளிட்ட பவித்ர திரவியங்களால் அபிஷேகம் செய்தனர். திருமண வாழ்வு சிறப்பாக அமைய வேண்டி ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.