குரூப்–2 தேர்வு நடைபெறுவதை ஆட்சியர் ஆய்வு
NEWS Sep 29,2025 01:27 pm
திருவாரூர் செய்தி திருவாரூர் நகராட்சிக்கு உட்பட்ட வேலுடையார் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்–2 தேர்வு நடைபெற்று வருகிறது. தேர்வின் ஏற்பாடுகள், பாதுகாப்பு, மைய வசதிகள் உள்ளிட்ட அனைத்தையும் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார். தேர்வர்களுக்கு தேவையான குடிநீர், மருத்துவம், மின்சாரம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.