வலங்கைமான் மாரியம்மன் ஆலய நவராத்திரி
NEWS Sep 28,2025 10:12 pm
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் செட்டித்தெரு ஸ்ரீவேம்படி சீதளாதேவி மகா மாரியம்மன் ஆலயத்தில் நவராத்திரி திருவிழாவில் அம்மன் ஸ்ரீ தான்யலட்சுமி அலங்காரத்தில் காட்சி அளித்தார். இரவு ஏழு மணிக்கு சமய சொற்பொழிவு நடைபெற்றது, எட்டு மணிக்கு சிறப்பு பூஜைகள் தீபாராதனை நடைபெற்றது. அதே இரவு ஏழு மணிக்கு மறுபக்கம் அம்மன் ஸ்ரீ மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்தில் காட்சி அளித்தார். அங்கும் பூஜைகள் தீபாராதனை நடைபெற்றது.