விஜய் கூட்ட நெரிசலில் சிக்கி 38 பேர் உயிரிழப்பு; 20க்கும் மேற்பட்டோர் கவலைக்கிடம்
NEWS Sep 27,2025 04:26 pm
கரூர்: தவெக தலைவர் விஜய் கரூரில் பரப்புரை மேற்கொண்ட நிலையில் அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 38 பேர் உயிரிழந்தனர். மேலும் 30 க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்த நிலையில் அங்குள்ள மருத்துவமனைகளை தயார் நிலையில் வைக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். மயங்கியவர்களை உடனடியாக மீட்ட போலீசார், ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 34 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். 25க்கும் மேற்பட்டோர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.