6,619 குவிண்டால் பருத்தி ரூ.4.87 கோடி ஏலம்
NEWS Sep 27,2025 08:44 pm
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான்– நீடாமங்கலம் சாலையில் உள்ள வேளாண்மை விற்பனை ஒழுங்குமுறை கூடத்தில் மின்னணு சந்தை மூலம் செயலாளர் கண்ணன் மேற்பார்வையில் இடைத்தரகர்கள் இன்றி நியாயமான முறையில் பருத்தி ஏலம் கடந்த ஜூன் மாதம் ஆறாம் தேதி முதல் புதன்கிழமை தோறும் 14 மறைமுக ஏலம் இதுவரை நடைபெற்றுள்ளது. இன்றுவரை 6 ஆயிரத்து 619 குவிண்டால் பருத்தி ரூபாய் 4.87 கோடிக்கு மொத்தமாக ஏலம் போனது என்பது குறிப்பிடத்தக்கது.