பொதக்குடி பள்ளி மாணவி குத்துச்சண்டையில் முதலிடம்
NEWS Sep 27,2025 08:42 pm
திருவாரூர் மாவட்ட அளவில் நடைபெற்ற குத்துச்சண்டை (Boxing) விளையாட்டு போட்டியில் பொதக்குடி அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி கே. சுகாநாயகி முதலிடம் பிடித்து சாதனை படைத்தார். மாவட்ட அளவிலான பல்வேறு பிரிவுகளில் இருந்து வந்த போட்டியாளர்களை வென்று அவர் சாம்பியன் பட்டம் பெற்றார். சுகாநாயகியின் இந்த வெற்றிக்கு பள்ளி ஆசிரியர்கள், மாணவிகள் மற்றும் கிராம மக்கள் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.