திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே இடும்பாவனத்தில் திமுக அரசின் சாதனைகளை விளக்கும் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நடைபெற்ற நிகழ்வில் மக்கள் திரளாக கலந்து கொண்டனர். அரசு நலத்திட்டங்கள் மற்றும் புதிய வளர்ச்சி திட்டங்களை விளக்கும் வகையில் கட்சி நிர்வாகிகள் குடுகுடுப்பை அடித்து ஊர்வலம் சென்றனர். பொதுமக்களுக்கு பிரசுரங்கள் வழங்கப்பட்டு திமுகவின் செயல்பாடுகள் பற்றி விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.