திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கண்டிதம்பேட்டை விவசாயி கிருஷ்ணமூர்த்தி- நளினி தம்பதி வீட்டில் ஓட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 18 சவரன் தங்க நகைகளை திருடி சென்றனர். இன்று காலை இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. பரவாக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தடயவியல் துறையினர் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. மோப்ப நாய் மூலம் தடயங்கள் தேடப்பட்டு வருகின்றன.