கொக்கலாடி ஊராட்சியில் மார்க்சிஸ்ட் கட்சியினரின் காத்திருப்பு போராட்டம்
NEWS Sep 27,2025 11:45 am
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே கொக்கலாடி ஊராட்சியில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். குடிநீர், சாலை, கழிவுநீர் வடிகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமையால் பொதுமக்கள் கடும் அவதி அடைகின்றனர் என்று அவர்கள் குற்றம்சாட்டினர். உடனடியாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என வலியுறுத்தினர்.