திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அதிமுக அலுவலகத்தில் கட்சியின் பூத் கமிட்டி மற்றும் தகவல் தொழில்நுட்பப் பிரிவுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் காமராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற தகவல் தொழில் பிரிவின் முக்கியத்துவம் மற்றும் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. மாவட்ட மற்றும் மண்டல அளவிலான கட்சி பொறுப்பாளர்கள் பலரும் இதில் பங்கேற்றனர்.