வங்கி பணியாளர் சங்கம் எச்சரிக்கை
NEWS Sep 24,2025 07:50 pm
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த சந்திப்பில் சங்கத்தின் கௌரவ பொதுச் செயலாளர் குப்புசாமி பேசினார். முதல்வர் மருந்தகம், 7 சதவீத வட்டி மானியம் வரவு வைக்கப்படாதது உள்ளிட்ட 25 அம்சக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் அடுத்த மாதம் 7 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம் என அவர் எச்சரிக்கை விடுத்தார். கூட்டத்தில் சங்க நிர்வாகிகள், பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.