வலங்கைமான் ஆலயத்தில் நவராத்திரி விழா
NEWS Sep 24,2025 04:35 pm
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜன்பேட்டை தெருவில் உள்ள மகா மாரியம்மன் ஆலயத்தில் நவராத்திரி விழா ஆனந்தமாக தொடங்கியது. காலை சிறப்பு பூஜைகள், கலச ஸ்தாபனம், வேத மந்திரங்கள் ஓதல் நடைபெற்றது. பக்தர்கள் திரளாக வந்து அம்மனை தரிசித்து அர்ச்சனையில் கலந்து கொண்டனர். ஒன்பது நாட்கள் தினமும் அபிஷேகம், அலங்காரம், தேவாரப் பஜனை, குண்டவாசல் பவனி உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற உள்ளதாக ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது.